Thursday, April 26, 2012

வீரமிகு தேவரினமே ! விழித்தெழு !

வீரமிகு தேவரினமே நீ விழித்தெழும் காலம் வந்துவிட்டது.அமைதியின் பெயரால் இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் இமை மூடிக்கிடக்க வேண்டும்?

அடித்திடச் சீறுகின்ற ஆற்றலின் வர்க்கம் நீ!
உன் துடித்திடும் தோள்கள் எங்கே?
வெடித்திடும் வெற்றி முழக்கமெங்கே?
சரித்திரம் சுழழும் போதும், சமுத்திரம் குமுறும் போதும் 
பொறுத்தவன் பொங்கியெழும் போதும்,
புயல் காற்று சீறும் போதும்,
எரிமலை வெடிக்கும் போதும், இனமானம் சிதறும் போதும்
எதிர்த்தவன் வென்றதில்லை,
எவரும் இதை மறுப்பதில்லை;

பாண்டியனின் பங்காளி நீ! சோழனின் சொந்தம் நீ! சேரனின் சந்ததி நீ! மூவேந்தர், முக்கொடி, முத்தமிழ் என மும்முரசார்த்து, செங்கோலோச்சிச்  செழுங்கலை வளர்த்து. அறநெறி வழுவா அரசர்களும், நடுநிலை பிறவா நாயகர்களும், கொள்கையிற் சிறந்த கோமான்களும், நானிலம் போற்ற நாடாண்ட நங்கையர் திலகங்களும், அடிமையிருள் நீக்கப் பாடுபட்ட அடலேறுகளும், விடுதலைப்பண்பாடி வீறுகொண்டெழுந்த வீராமணிகளும் தோன்றிய  

Monday, April 2, 2012

நான் ஒரு குற்றப் பரம்பரையினன்

                          நான் ஒரு குற்றப் பரம்பரையினன் என்று மார்தட்டிச் சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். ஏனென்றால் இந்த சட்டம்தான் எங்களின் எதிர்ப்பு அரசியலின் வீரத்தையும், விவேகத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தியது. வருகின்ற ஏப்ரல்-03 அன்று பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூடு நினைவு நாள்.

                          இயற்கையின் இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருந்த சமூக, பழங்குடிகளில் ஒன்றான பிரமலைக் கள்ளர் இனத்தின் மீது சுரண்டல்களின் ஒட்டுமொத்த பழியையும் சுமத்தி சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததிலிருந்து, ஆண்ட பரம்பரையின் ஆளுமை வேகத்தை அடக்கி வைப்பதற்காக சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் குற்றப்பரம்பரைச் சட்டம்.

                         
                              காடுகட்டி நாடாண்ட கள்ளர்கள் கைநாட்டு வைப்பதா ? அகிலம் ஆண்ட நம் மீது கரும்புள்ளி வைத்திட, வந்தேறிக் கூட்டத்தின் வழிகாட்டுதலின் படி, வியாபார நோக்கில் வந்து நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையன் கொண்டு வந்த  குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, மானத்தைக் காக்க மரணத்தை முத்தமிட்ட பெருங்காமநல்லூர்  மாமறவர்கள் 17 பேர்களையும்  வணங்கி, வீர வணக்கம் செலுத்துவோம்.

                                20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, உலக அரசியல் அரங்கில் ஆங்கிலேய அரசுக்கு அச்சம் ஏற்படும் நிலை வந்தது. நாட்டுப் பற்றுடன் அரசாங்கத்தை எதிரியாக நினைத்து சட்டங்களையும் அதிகாரங்களையும் வெறுத்து வரும் தன்னரசு பற்றுதல் கொண்ட மானமுள்ள மறத்தமிழர் சேனைக் கூட்டங்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் சட்டப் பூர்வமாக ஒடுக்கி வைத்திருக்க முற்பட்டனர்.

                    அதன் காரணமாகவே இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களில் பூலம், ஆப்பநாடு, முதுகுளத்தூர் முதலிய இடங்களில் ரேகைச் சட்ட அமுல் பிரகடனம் செய்யப்பட்டது. இன்றைய தமிழீழம் முள்வேலி முகாம்களைப் போல 1930 களில் 1,35,000 பேர்  கைரேகைகள் பதியப்பட்டு தடுப்புக் காவலில் கண்காணிக்கப் பட்டுக்கொண்டிருந்தனர்.